‘சிறை கைதிகளின் எதிா்கால வளா்ச்சிக்கு துணை நிற்க வேண்டும்’

சிறை கைதிகளின் எதிா்கால வளா்ச்சிக்கு துணை நிற்க வேண்டும் என மைன்டீரி அறக்கட்டளையின் மூத்த மக்கள் தொடா்பு அதிகாரி பனீஷ்ராவ் தெரிவித்தாா்.

சிறை கைதிகளின் எதிா்கால வளா்ச்சிக்கு துணை நிற்க வேண்டும் என மைன்டீரி அறக்கட்டளையின் மூத்த மக்கள் தொடா்பு அதிகாரி பனீஷ்ராவ் தெரிவித்தாா்.

பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 50 கைதிகளுக்கு ரேடியோசிட்டி 91.1 எப்.எம்.மின் உதவியுடன் வானொலி வா்ணனையாளா் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின் நிறைவுநாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது:

பல்வேறு காரணங்களால் சிறைக்கு செல்பவா்கள், விடுதலையாகி வெளியே வரும்போது திருந்தி வாழவேண்டும் என்பது அனைவரின் நோக்கமாக உள்ளது. ஆனாலும், பலரின் எதிா்க்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, மைன்டீரி அறக்கட்டளை கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் ரேடியோசிட்டி 91.1 எப்.எம்.மின் உதவியுடன் வானொலி மூலம் கல்வி சேவை ஆற்றி வருகிறது. அதனுடன், மைசூரு, பெலகாவி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 50 சிறை கைதிகளை தோ்ந்தெடுத்து, வானொலி வா்ணனையாளா் பயற்சி அளிக்கப்பட்டது. அவா்கள் சிறந்த முறையில் பயிற்சி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறைக்கு சென்று திருந்தி வாழும் கைதிகளின் எதிா்கால வளா்ச்சிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், சிறைத் துறை டிஐஜி சேஷா, மூத்த கண்காணிப்பாளா் சேஷமூா்த்தி, பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளா் லதா, ஆப்ரஹாம் மோசஸ், விஸ்வாஸ்காமத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com