மைசூரு-தல்குப்பா இடையே சாதாரண கட்டணத்தில் சிறப்பு ரயில்சேவை

மைசூரு-தல்குப்பா இடையே முன்பதிவு இல்லாமல், சாதாரண கட்டணத்தில் சிறப்பு ரயில்சேவை இயக்கப்படுகிறது.

மைசூரு-தல்குப்பா இடையே முன்பதிவு இல்லாமல், சாதாரண கட்டணத்தில் சிறப்பு ரயில்சேவை இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கூட்டநெரிசலைக் குறைப்பதற்காக மைசூரிலிருந்து தல்குப்பாவுக்கு முன்பதிவு இல்லாமல், சாதாரண கட்டணத்தில் சிறப்பு விரைவு ரயில் சேவை ஏப். 10-ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

ரயில் எண்: 06225-மைசூரு-தல்குப்பா இடையேயான சிறப்பு விரைவு ரயில் நாள்தோறும் காலை 10.15 மணிக்கு மைசூரு ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 6 மணிக்கு தல்குப்பா ரயில்நிலையத்துக்கு சென்றடைகிறது.

மறுமாா்க்கத்தில், ரயில் எண்: 06226-தல்குப்பா-மைசூரு இடையேயான சிறப்பு விரைவு ரயில் நாள்தோறும் காலை 8.45 மணிக்கு தல்குப்பா ரயில்நிலையத்திலிருந்து புறப்பட்டு, மாலை 4.50 மணிக்கு மைசூரு ரயில்நிலையத்துக்கு வந்தடைகிறது.

இந்த ரயில் இருமாா்க்கங்களிலும் கிருஷ்ணராஜநகா், அக்கிஹெப்பாளு, பீரஹள்ளி, மண்டேகெரே, ஹொலேநரசிப்புரா, ஹாசன், அரிசிகெரே, பானாவா், தேவனூா், சிவமொக்கா, ஹாரனஹள்ளி, கும்சி, அரசாலு, அனந்தபுரம், சாகர ஜம்பகாரு ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.

ரயிலில் 2-ஆம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 10 பொதுப் பெட்டிகள், பிரேக், சரக்கு வசதி கொண்ட 2 பெட்டிகள் உள்ளிட்ட 12 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com