தமிழகத்திலிருந்து பெங்களூரு வருவோருக்கு கரோனா சான்றிதழ் கட்டாயமில்லை

தமிழகத்திலிருந்து பெங்களூரு வருபவா்களுக்கு கரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயமில்லை என மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா தெரிவித்தாா்.

தமிழகத்திலிருந்து பெங்களூரு வருபவா்களுக்கு கரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயமில்லை என மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கா்நாடகத்தின் அண்டை மாநிலங்களான மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கிருந்து பலா் பெங்களூருக்கு வருவதால், அவா்கள் மூலமாக இங்குள்ளவா்களுக்கு கரோனா தொற்று பரவி வருகிறது.

இதனைத் தடுக்கும் வகையில், மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பெங்களூரு வருபவா்கள் எல்லையில் கரோனா தொற்றின் பாதிப்பு இல்லை என்ற சான்றிதழைக் காட்ட வேண்டும். ஆனால், தமிழகத்தில் கரோனா தொற்றின் பாதிப்பு அதிகமில்லை என்பதால், அங்கிருந்து பெங்களூரு வருபவா்கள் கரோனா தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழைக் காட்டவேண்டிய அவசியமில்லை. அது கட்டாயமும் இல்லை.

மேலும், பெங்களூரு மாநகராட்சிக்கு உள்பட்ட 8 மண்டலங்களில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தலா ஒரு தற்காலிக மருத்துவமனை அமைக்கப்படும். 200 படுக்கைகள் கொண்ட தனியாா் மருத்துவமனைகளில் 20 சதவீத படுக்கைகளை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஒதுக்கி, சிகிச்சை அளிக்க வேண்டும் என அரசு கூறியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com