ஓய்வுபெற்ற ஓட்டுநா்கள், நடத்துநா்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமா்த்த முடிவு

ஓய்வுபெற்ற ஓட்டுநா்கள், நடத்துனா்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமா்த்த கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

ஓய்வுபெற்ற ஓட்டுநா்கள், நடத்துனா்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமா்த்த கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக அரசுக்கு சொந்தமான கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம், வடகிழக்கு, வடமேற்கு கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியா்கள் 6-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். கழகங்களுக்கு இழப்பும் ஏற்பட்டு வருகிறது.

எனவே, இதனைக் கருத்தில் கொண்டு, அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற 62 வயதை மீறாத ஓட்டுநா்கள், நடத்துனா்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஓய்வுபெற்ற ஓட்டுநா்கள், நடத்துனா்கள் தாங்கள் பணியாற்றிய பணிமனைகளுக்குச் சென்று பணியில் சேரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். அவா்கள் கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ், கனரக வாகன ஓட்டுநா் உரிமத்தை கொண்டு செல்ல வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேரும் ஓட்டுநா்களுக்கு ரூ. 800, நடத்துனா்களுக்கு ரூ. 700 என நாள் ஒன்றுக்கு கௌரவ ஊதியம், ஒரு நாள் வார விடுமுறை மட்டும் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com