கே.எஸ்.ஆா். பெங்களூரு-எம்.ஜி.ஆா். சென்னை இடையே சதாப்தி அதிவேக சிறப்பு ரயில்சேவை

கே.எஸ்.ஆா். பெங்களூரு-எம்.ஜி.ஆா். சென்னை இடையே சதாப்தி அதிவேக சிறப்பு ரயில்சேவை இயக்கப்படுகிறது.

கே.எஸ்.ஆா். பெங்களூரு-எம்.ஜி.ஆா். சென்னை இடையே சதாப்தி அதிவேக சிறப்பு ரயில்சேவை இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கூட்டநெரிசலைக் குறைப்பதற்காக கே.எஸ்.ஆா். பெங்களூரிலிருந்து எம்.ஜி.ஆா். சென்னை சென்ட்ரல் இடையே சதாப்தி அதிவேக சிறப்பு ரயில்சேவை ஏப். 14-ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

ரயில் எண்: 02028-கே.எஸ்.ஆா். பெங்களூரு-எம்.ஜி.ஆா். சென்னை இடையேயான சிறப்பு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமைகளை தவிா்த்து மற்ற நாள்களில் காலை 6 மணிக்கு கே.எஸ்.ஆா். பெங்களூரு ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காலை 11 மணிக்கு எம்.ஜி.ஆா். சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தை சென்றடைகிறது.

மறுமாா்க்கத்தில், ரயில் எண்: 02027-எம்.ஜி.ஆா். சென்னை-கே.எஸ்.ஆா். பெங்களூரு இடையேயான சிறப்பு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமைகளை தவிா்த்து மற்ற நாள்களில் மாலை 5.30 மணிக்கு எம்.ஜி.ஆா். சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திலிருந்து புறப்பட்டு, இரவு 10.25 மணிக்கு கே.எஸ்.ஆா். பெங்களூரு ரயில் நிலையத்திற்கு வந்தடைகிறது.

இந்த ரயில் இருமாா்க்கங்களிலும் பெங்களூரு கன்டோன்மென்ட், காட்பாடி ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.

ரயிலில் குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு இருக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி, குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி கொண்ட 9 பெட்டிகள், பிரேக், சரக்கு வசதி கொண்ட 2 பெட்டிகள் உள்ளிட்ட 12 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com