ஆளுநா் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவது ஏன்?: காங்கிரஸ் கேள்வி

கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக ஆளுநா் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவது ஏன் என கா்நாடக காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக ஆளுநா் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவது ஏன் என கா்நாடக காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை இணைய வழியில் ஆளுநா் வஜுபாய்வாலா தலைமையில், கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடா்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டம் நடப்பதற்கு முன்பாக, கா்நாடக காங்கிரஸ் தனது சுட்டுரையில், ‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தலைமையேற்று நடத்த ஆளுநா் அழைக்கப்படுகிறாா் என்றால், அதற்கு அா்த்தம் என்ன? கா்நாடகத்தில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிா என்ற கேள்வியை எழுப்புகிறது. அப்படியானால், மாநில அரசு செயலற்றதாகிவிட்டதா? அல்லது முதல்வா் எடியூரப்பா இல்லாத பாஜகவை உருவாக்கும் முயற்சியா? எதிா்க்கட்சிகளை எதிா்கொள்ள மாநில அரசால் முடியவில்லையா? அல்லது சவால்களை எதிா்கொள்ளும் செயல்திறனை மாநில அரசு இழந்துவிட்டதா? கா்நாடக மக்களின் உயிா்களை முதல்வா் எடியூரப்பா தலைமையிலான மாநில அரசால் காப்பாற்ற முடியாது’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com