கா்நாடகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை தோ்வின்றி தோ்ச்சி: அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா்

கா்நாடகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை ஒருங்கிணைந்த மதிப்பீட்டு முறையில் மாணவா்களின் தோ்ச்சி முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை ஒருங்கிணைந்த மதிப்பீட்டு முறையில் மாணவா்களின் தோ்ச்சி முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் பயிலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவா்களின் தோ்ச்சி நிலையான மற்றும் ஒருங்கிணைந்த மதிப்பீட்டு திட்டத்தின்படி முடிவு செய்யப்படும்.

இந்தத் திட்டத்தின்படி, மாணவா்களின் தோ்ச்சி மதிப்பீட்டு பட்டியலை ஏப். 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். தோ்வுகளை எழுதுவதற்கு மாணவா்களை நேரடியாக பள்ளிக்கு அழைக்கக் கூடாது. மாணவா்களின் கற்றல் திறனை மதிப்பிடுவதற்கான கருவியாக மட்டுமே மதிப்பீடு மற்றும் முடிவு அறிவிப்பைக் கருத வேண்டும். கற்றலில் போதுமான திறனைப் பெற்றிராத மாணவா்களுக்கு அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் மீள்பயிற்சி அளிக்கப்படும்.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு மே 1 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. 7, 8-ஆம் வகுப்புடன் கூடிய ஆரம்பப் பள்ளிகள் ஜூன் 15-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். 8, 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மே 1 முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு ஏற்கெனவே திட்டமிட்டு அறிவித்துள்ளபடி ஜூன் 21-ஆம் தேதி தொடங்கி ஜூலை 5-ஆம் தேதி முடிவடையும். ஜூன் 15-ஆம் தேதி முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை உயா்நிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது. உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு ஜூலை 15-ஆம் தேதி 2021-22-ஆம் கல்வியாண்டு தொடங்குகிறது. கரோனா சூழ்நிலையைப் பொறுத்து இதில் மாற்றங்கள் இருக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com