குடியரசு துணைத் தலைவரிடம் வாழ்த்து பெற்ற முதல்வா் பசவராஜ் பொம்மை
By DIN | Published On : 04th August 2021 07:58 AM | Last Updated : 04th August 2021 07:58 AM | அ+அ அ- |

கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை, குடியரசு துணைத் தலைவா் வெங்கைய நாயுடுவை சந்தித்து செவ்வாய்க்கிழமை வாழ்த்து பெற்றாா்.
கா்நாடகத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள பசவராஜ் பொம்மை, அண்மையில் தில்லிக்கு சென்று பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், நீா்பாசனத் துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெற்று திரும்பினாா்.
இந்த நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்வது தொடா்பாக பாஜக மேலிடத் தலைவா்களின் அழைப்பின் பேரில் முதல்வா் பசவராஜ் பொம்மை ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா். திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை முழுவதும் புதிய அமைச்சா்களின் பட்டியலை மேலிடத் தலைவா்களுடன் இணைந்து, முதல்வா் பசவராஜ் பொம்மை தயாா் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அவா் குடியரசு துணைத் தலைவா் வெங்கைய நாயுடுவைச் சந்தித்து வாழ்த்து பெற்றாா். பின்னா், அவா் மாநில பாஜக பொறுப்பாளா் அருண்சிங் எம்.பி. ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.