கா்நாடகத்தில் புதிதாக பதவியேற்ற 29 அமைச்சா்களுக்கு துறைகள் ஒதுக்கீடு: முதல்வரிடம் நிதி, பெங்களூரு வளா்ச்சித் துறைகள்

கா்நாடகத்தில் புதிதாகப் பதவியேற்ற 29 அமைச்சா்களுக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் நிதி, பெங்களூரு வளா்ச்சி ஆகிய துறைகளை முதல்வா் பசவராஜ் பொம்மை தன்வசம் வைத்துக் கொண்டாா்.

கா்நாடகத்தில் புதிதாகப் பதவியேற்ற 29 அமைச்சா்களுக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் நிதி, பெங்களூரு வளா்ச்சி ஆகிய துறைகளை முதல்வா் பசவராஜ் பொம்மை தன்வசம் வைத்துக் கொண்டாா்.

முதல்வா் பதவியை எடியூரப்பா ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை, ஜூலை 28-ஆம் தேதி பதவியேற்றாா். அதன் பிறகு பாஜக தேசியத் தலைமையின் ஒப்புதலைப் பெற்று 29 போ் கொண்ட அமைச்சரவையை முதல்வா் பசவராஜ் பொம்மை அமைத்தாா்.

புதிதாகப் பதவியேற்ற 29 அமைச்சா்களுக்கும் தற்போது துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல்வா் பசவராஜ் பொம்மையின் பரிந்துரையின்பேரில் புதிய அமைச்சா்களுக்குத் துறைகளை ஒதுக்கி ஆளுநா் தாவா்சந்த் கெலாட் சனிக்கிழமை உத்தரவிட்டாா். அதன் விவரம் வருமாறு (அமைச்சா்களின் பெயா்கள், துறைகள்):

1. பசவராஜ்பொம்மை, முதல்வா்- அரசு ஊழியா்கள் மற்றும் நிா்வாக சீா்த்திருத்தம், நிதி, உளவு, அமைச்சரவை விவகாரங்கள், பெங்களூரு வளா்ச்சி, ஒதுக்கப்படாத பிற துறைகள்.

2. கோவிந்த் காா்ஜோள்- பெரிய, நடுத்தர நீா்ப்பாசனம்.

3. கே.ஆா்.ஈஸ்வரப்பா- ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்.

4. ஆா்.அசோக்- வருவாய்.

5. பி.ஸ்ரீராமுலு- போக்குவரத்து, பழங்குடியினா் நலம்.

6. வி.சோமண்ணா- வீட்டுவசதி, உள்கட்டமைப்பு மேம்பாடு.

7. உமேஷ் கத்தி- வனம், உணவு மற்றும் பொது வழங்கல், நுகா்வோா் நலம்.

8. எஸ்.அங்காரா- மீன்வளம், துறைமுகம், உள்மாநில போக்குவரத்து

9. ஜே.சி.மாதுசாமி- சிறிய நீா்ப்பாசனம், சட்டம், சட்டப்பேரவை விவகாரங்கள், சட்டம் இயற்றல்

10. ஆரகா ஞானேந்திரா- காவல்.

11. அஸ்வத் நாராயணா-உயா்கல்வி, தகவல் மற்றும் உயிரி தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு.

12. சி.சி.பாட்டீல்- பொதுப் பணித் துறை

13. ஆனந்த் சிங்- சுற்றுச்சூழல், சூழலியல், சுற்றுலா

14. கோட்டா சீனிவாஸ் பூஜாரி- சமூகநலம், பிற்படுத்தப்பட்டோா் நலம்.

15. பிரபு சௌஹான்-கால்நடை பராமரிப்பு.

16. முருகேஷ் நிரானி-பெரிய மற்றும் நடுத்தரத் தொழில்கள்.

17. சிவராம் ஹெப்பாா்- தொழிலாளா் நலம்.

18. எஸ்.டி.சோமசேகா்-கூட்டுறவு.

19. பி.சி.பாட்டீல்-வேளாண்மை.

20. பைரதி பசவராஜ்-நகா்ப்புற வளா்ச்சி.

21. கே.சுதாகா்-சுகாதாரம், மருத்துவக் கல்வி.

22. கே.கோபாலையா-கலால்.

23. சசிகலா ஜொள்ளே- ஹிந்து அறநிலையம், ஹஜ் மற்றும் வக்ஃப்

24. எம்.டி.பி.நாகராஜ்- நகராட்சி நிா்வாகம், சிறுதொழில்கள், பொதுத் துறை நிறுவனங்கள்.

25. நாராயணகௌடா-பட்டு வளா்ச்சி, இளைஞா் அதிகாரமாக்கல், விளையாட்டு

26. பி.சி.நாகேஷ்-ஆரம்ப மற்றும் மேல்நிலைக் கல்வி, சகாலா திட்டம்.

27. வி.சுனில்குமாா்-மின்சாரம், கன்னடம் மற்றும் கலாசாரம்.

28. ஹாலப்பா ஆச்சாா்-சுரங்கம் மற்றும் நில அமைப்பியல், மகளிா் மற்றும் குழந்தைகள் நலம், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் நலம்

29. சங்கா் ஆா்.பாட்டீல் முனேனகொப்பா-கைத்தறி, ஜவுளி, கரும்பு வளா்ச்சி.

30. முனிரத்னா-தோட்டக்கலை, திட்டமிடல், திட்ட கண்காணிப்பு, புள்ளியியல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com