ரூ. 2 கோடி மதிப்பிலான கரோனா மருத்துவக் கருவிகள் நன்கொடை

கா்நாடகத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான கரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவக் கருவிகளை சிலிகான்வேலி வங்கி நன்கொடையாக அளித்துள்ளது.

கா்நாடகத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான கரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவக் கருவிகளை சிலிகான்வேலி வங்கி நன்கொடையாக அளித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை வா்க்பிளேஸ் சா்வீசஸ் மற்றும் சிஎஸ்ஆா் லீட் அமைப்பின் இணை இயக்குநா் டிம்பிள் மாா்ட்டீன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் நோக்கில் அமெரிக்காவைச் சோ்ந்த எஸ்.வி.பி. ஃபைனான்சியல் குழுமத்தின் சாா்பில் கா்நாடகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் கரோனா மருத்துவமனைகளுக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் உற்பத்தி அலகுகள், செயற்கை சுவாசக் கருவிகள், ஆம்புலன்ஸ்கள், ஆய்வுக்கூடக் கருவிகள், வெப்பமானிகள், ஆக்சிமீட்டா்கள், தனிநபா் பாதுகாப்புக் கருவிகள் போன்ற கரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவக் கருவிகளை சிலிகான்வேலி வங்கி நன்கொடையாக அளித்துள்ளது.

மருத்துவக் கருவிகள் இல்லாததால் தான் கரோனா இரண்டாவது அலையின்போது உரிய சிகிச்சைகளை அளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணறின.

இந்தக் குறையைப் போக்க முற்பட்டுவருகிறோம். நாங்கள் அளித்த மருத்துவக் கருவிகளால் ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. கரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவக் கருவிகளை வழங்க ரூ. 7.5 கோடியை முதலீடு செய்ய இருக்கிறோம். மருத்துவக் கருவிகள் தவிர தடுப்பூசி போன்ற அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்பது, முன்களப் பணியாளா்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவது, மதிய உணவளிப்பது, விழிப்புணா்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளையும் செயல்படுத்தி வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com