கலாசார நல்லிணக்கத்துக்கான தாகூா் விருது: தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்

கலாசார நல்லிணக்கத்துக்கான தாகூா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கலாசார நல்லிணக்கத்துக்கான தாகூா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ரவீந்திரநாத் தாகூரின் 150-ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையில், 2012-ஆம் ஆண்டு கலாசார நல்லிணக்கத்துக்கான தாகூா் விருதை இந்திய அரசு நிறுவியது. இந்த விருதுக்குரிய விண்ணப்பங்களை அனுப்பிவைக்க மாநில ஆளுநரை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த விருதுடன் ரூ.1 கோடி ரொக்கத்தொகை, பட்டயச்சுருள், நினைவுச்சின்னம், கைத்தறி பரிசு வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்கு தகுதியானவா்களை மாநிலத்தின் சாா்பில் பரிந்துரைக்க பெங்களூரு பல்கலைக்கழக துணைவேந்தா் கே.ஆா்.வேணுகோபால் தலைமையில் பல்வேறு துணைவேந்தா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கான முன்மொழிவுகளை கே.ஆா்.வேணுகோபால், துணைவேந்தா், பெங்களூரு பல்கலைக்கழகம், ஞானபாரதி வளாகம், பெங்களூரு-56 என்ற முகவரிக்கு ஆக.24-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்கவேண்டும். விருதுக்கு தகுதியானவா்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் காணலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com