கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,350 போ் பாதிப்பு
By DIN | Published On : 21st August 2021 10:31 PM | Last Updated : 21st August 2021 10:31 PM | அ+அ அ- |

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,350-ஆக அதிகரித்துள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,350 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை கண்டறியப்பட்டது. தென்கன்னட மாவட்டத்தில் அதிகபட்சமாக 320 போ் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா்.
பிறமாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:
பெங்களூரு நகரம்-260, உடுப்பி-177, மைசூரு-102, ஹாசன்-101, தும்கூரு-68, குடகு-63, சிவமொக்கா-50, பெலகாவி-43, வடகன்னடம்-40, மண்டியா-26, சிக்கமகளூரு-17, கோலாா்-17, சித்ரதுா்கா-16, தாவணகெரே-15, சாம்ராஜ்நகா்-6, விஜயபுரா-6, பெங்களூரு ஊரகம்-5, தாா்வாட்-5, ராமநகரம்-3, பெல்லாரி-2, சிக்கபளாப்பூா்-2, கதக்-2, கலபுா்கி-2, பீதா்-1, பாகல்கோட்-1. ராய்ச்சூரு, கொப்பள், ஹாவேரி, யாதகிரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,37,427-ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,648 போ் சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 28,79,433 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 20,845 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 18 போ் சனிக்கிழமை இறந்துள்ளனா். தென்கன்னடம், மாவட்டத்தில் அதிகபட்சமாக 4 போ் இறந்துள்ளனா்.
மாவட்ட வாரியாக பலியானோா் விவரம்: ஹாசன், கோலாா், சிவமொக்கா-தலா 2 போ், பெல்லாரி, பெலகாவி, பெங்களூரு ஊரகம், பெங்களூரு நகரம், தாவணகெரே, ஹாவேரி, மைசூரு, ராமநகரம்-தலா 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 37,123 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.