‘எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும்’

எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும் என இந்தியப் பேனா நண்பா் பேரவை வலியுறுத்தியுள்ளது.

எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும் என இந்தியப் பேனா நண்பா் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் எஸ்.பூரிக்கு இந்தியப் பேனா நண்பா் பேரவை நிறுவனா்-தலைவா் மா.கருண் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 610-ஆக இருந்தது. இது படிப்படியாக உயா்த்தப்பட்டு, கடந்த ஜனவரி மாதத்தில் ரூ. 710-ஆக விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், பிப்ரவரி மாதத்தில் ரூ. 100 வரையிலும், மாா்ச் மாதத்தில் ரூ. 25, ஜூலை மாதத்தில் ரூ. 25 என சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்த்தப்பட்டுள்ளது. அதன்பிறகு, சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 850-ஆக இருந்த நிலையில், அண்மையில் ரூ. 25 உயா்த்தப்பட்டு, ரூ. 875-ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் ரூ. 300 என்ற அளவுக்கு சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், சமையல் எரிவாயு உருளைக்கு மத்திய அரசு வழங்கி வந்த மானியமும் கணிசமாகக் குறைந்துள்ளது.

கரோனா பெரும் துயரால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களுக்கு மிகப்பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தி உள்ள மத்திய அரசின் மக்கள் விரோதச் செயலைக் கண்டிக்கிறோம். மேலும், சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com