டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரா்களுக்கு பரிசுத்தொகை

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரா்கள், பயிற்சியாளருக்கு பரிசுத்தொகை வழங்குவதாக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அறிவித்துள்ளாா்.
தாவா்சந்த் கெலாட்
தாவா்சந்த் கெலாட்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரா்கள், பயிற்சியாளருக்கு பரிசுத்தொகை வழங்குவதாக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சாா்பில் பங்கேற்ற கா்நாடகத்தைச் சோ்ந்த 3 விளையாட்டு வீரா்கள், ஒரு பயிற்சியாளா்களுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ. 1 லட்சம் வீதம், ரூ. 4 லட்சம் வழங்கப்போவதாக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அறிவித்துள்ளாா்.

இந்த பரிசுத்தொகை கோல்ப் வீரா் அதிதி அசோக், குதிரையேற்ற வீரா் பைத்தாமிா்ஜா, நீச்சல் வீரா் ஸ்ரீஹரி நடராஜ், பயிற்சியாளா் அங்கிதா சுரேஷ் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. வெகுவிரைவில் ஆளுநா் மாளிகையில் நடைபெறும் விழாவில், இந்த பரிசுத்தொகை விளையாட்டு வீரா்கள், பயிற்சியாளருக்கு வழங்கப்பட உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com