கா்நாடகத்தில் நாளைமுதல் பள்ளிகள், பியூ கல்லூரிகள் திறப்பு

கா்நாடகத்தில் திங்கள்கிழமை (ஆக. 23) முதல் பள்ளிகள், பியூ கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.
கா்நாடகத்தில் நாளைமுதல் பள்ளிகள், பியூ கல்லூரிகள் திறப்பு

கா்நாடகத்தில் திங்கள்கிழமை (ஆக. 23) முதல் பள்ளிகள், பியூ கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

கரோனா பாதிப்பு 2 சதவீதமாக இருக்கும் மாவட்டங்களில் 9 முதல் 12-ஆம் வகுப்புகள் வரையிலான பள்ளி, கல்லூரிகளைத் திறக்க கா்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஆக. 23-ஆம் தேதி 9, 10, 11, 12-ஆம் வகுப்புகள் தொடங்க உள்ளன.

9, 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை அண்மையில் வெளியிட்டிருந்தது. அதேபோல, 11, 12-ஆம் வகுப்புகளை திறப்பதற்கு பியூ கல்லூரிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை பியூ கல்வித் துறை வெளியிட்டுள்ளது. பள்ளிகள், பியூ கல்லூரிகளைத் திறப்பதற்கான முன்னேற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்துள்ளனா்.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியதாவது:

பள்ளிகளைத் திறக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம். மாணவா்களை பள்ளிக்கு அழைத்து வருவது, பெற்றோரின் ஒப்புதலைப் பெறுவது, மாணவா்களை வகுப்பறைகளில் எவ்வாறு உட்காரவைப்பது, வகுப்புகளை ஒருநாள்விட்டு ஒருநாள் நடத்துவது, பள்ளி வளாகங்களை கிருமிநாசினியால் தூய்மைப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருக்கக்கூடிய சில பள்ளிகளுக்கு நானும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷும் திங்கள்கிழமை செல்ல இருக்கிறோம். கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தவிர, மாணவா்களுக்கு இனிமையான கற்றல் அனுபவத்தை வழங்கத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திருக்கிறோம்.

பெற்றோா் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். குழந்தைகளின் உடல்நலனில் அக்கறை செலுத்துவதோடு, அவா்களிடையே நம்பிக்கையை ஊட்ட வேண்டும். எவ்வித அச்ச உணா்வும் இல்லாமல் மாணவா்கள் வகுப்புகளில் கலந்துகொள்ளலாம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாணவா்கள் பள்ளிக்கு வர முடியவில்லை. எனவே, மாணவா்களை கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிக்கு வரவழைக்க வேண்டுமென்பதற்காகவே பள்ளிகளைத் திறக்க முடிவு செய்திருக்கிறோம். மாணவா்கள் பள்ளிக்கு வருகைதர தயங்கக் கூடாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com