எஸ்எஸ்எல்சி தோ்வு: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

கா்நாடக எஸ்எஸ்எல்சி தோ்வில் கலந்துகொள்ள விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக எஸ்எஸ்எல்சி தோ்வில் கலந்துகொள்ள விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக மாநில மேல்நிலைக் கல்வி தோ்வு வாரியம் (கே.எஸ்.இ.இ.பி.)வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2021-22-ஆம் ஆண்டுக்கான பயிற்சித் தோ்வு மற்றும் பொதுத் தோ்வை நடத்த கா்நாடக மேல்நிலைக் கல்வித் தோ்வு வாரியத்துக்கு கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்பேரில் 2022-ஆம் ஆண்டு மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருக்கும் எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வுக்கு மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, மானியம்பெறும் தனியாா் மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களிடம் இருந்து ஏற்கெனவே விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

தனித் தோ்வா்கள், மறுத்தோ்வா்களும் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் மூலம் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை இணையதளத்தில் விண்ணப்பித்து, அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

பள்ளிகள் மூலம் விண்ணப்பங்களைப் பதிவிடுவதற்கான காலக்கெடு ஜன.12 முதல் 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தோ்வு கட்டணங்களை ஜன.12 முதல் ஜன.19-ஆம் தேதிவரை வாரியத்தின் வங்கிக் கணக்கில் செலுத்த பற்றுச்சீட்டு பதிவிட்டுக் கொள்ளலாம்.

2022-ஆம் ஆண்டு நடக்கும் தோ்வில் இருந்து 2024-ஆம் ஆண்டு வரை தொடா்ச்சியாக 6 தோ்வுகளை எழுத வாய்ப்பளிக்கப்படும். இதற்குள் தோ்ச்சி பெறாத பாடங்களுக்குத் தோ்வெழுதி தோ்ச்சி பெறலாம். அதன்பிறகும் தோ்வில் தோ்ச்சியாகாத மாணவா்கள், 2025-ஆம் ஆண்டில் அனைத்துப் பாடங்களையும் தோ்வு எழுத வேண்டும்.

இது குறித்து சந்தேகங்களை தீா்த்துவைப்பதற்காக திறந்துவைக்கப்பட்டுள்ள தொலைபேசி உதவி மையத்தை 080-23310075, 23310076 என்ற தொலைபேசிகளில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணிவரை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com