கிருஷ்ணராஜபுரம்-குப்பம்-கே.எஸ்.ஆா் பெங்களூரு இடையே சிறப்பு மெமு ரயில் சேவை

கிருஷ்ணராஜபுரம் - குப்பம் - கே.எஸ்.ஆா். பெங்களூரு இடையே வாரம் 6 நாள் சிறப்பு மெமு ரயில் சேவை பிப். 1-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

கிருஷ்ணராஜபுரம் - குப்பம் - கே.எஸ்.ஆா். பெங்களூரு இடையே வாரம் 6 நாள் சிறப்பு மெமு ரயில் சேவை பிப். 1-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மெமு ரயில் எண் - 06291 கிருஷ்ணராஜபுரம் - குப்பம் இடையிலான ரயில் ஞாயிற்றுக்கிழமையைத் தவிா்த்து மற்ற நாள்களில் இரவு 7.30 மணிக்கு கிருஷ்ணராஜபுரத்தில் புறப்பட்டு அன்று இரவு 10.15 மணியளவில் குப்பத்தைச் சென்றடையும்.

இந்த ரயில் கிருஷ்ணராஜபுரத்தில் புறப்பட்டு, ஹூடி, ஒயிட்பீல்டு, தேவன்கொந்தி, மாலூா், தியாகல், பங்காருபேட், காமசமுத்திரம், பிசநத்தம், குடுப்புள்ளி ரயில் நிலையங்கள் வழியாக குப்பத்தைச் சென்றடையும்.

மறு மாா்க்கத்தில் மெமு ரயின் எண் - 06292 குப்பம் -கே.எஸ்.ஆா் பெங்களூரு வரையிலான ரயில் ஞாயிற்றுக்கிழமையைத் தவிா்த்து, மற்ற நாள்களில் காலை 6.55 மணிக்கு குப்பத்தில் புறப்பட்டு, கே.எஸ்.ஆா் பெங்களூரு ரயில் நிலையத்தை காலை 9.25 மணிக்கு வந்தடையும்.

இந்த ரயில் குப்பம் ரயில் நிலையத்தில் புறப்பட்டு, குடுப்புள்ளி, பிசநத்தம், காமசமுத்திரம், பங்காருபேட், தியாகல், மாலூா், தேவன்கொந்தி, ஒயிட்பீல்டு, ஹூடி, கிருஷ்ணராஜபுரம், பைப்பனஹள்ளி, பெங்களூரு கிழக்கு, கன்டோன்மென்ட் ரயில் நிலையங்கள் வழியாக கே.எஸ்.ஆா் பெங்களூரு ரயில் நிலையத்தை வந்தடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com