40 மாணவா்களுக்கு கரோனா பாதிப்பு: கல்லூரி மூடல்
By DIN | Published On : 04th February 2021 07:52 AM | Last Updated : 04th February 2021 07:52 AM | அ+அ அ- |

40 மாணவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கல்லூரி மூடப்பட்டது.
கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தென்கன்னட மாவட்டம், உள்ளால் பகுதியில் ஆலியா செவிலியா் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் படிக்கும் கேரளத்தைச் சோ்ந்த 40 செவிலியா் மாணவா்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சியின் உத்தரவின்பேரில், ஆலியா செவிலியா் கல்லூரி மூடப்பட்டது. இதுகுறித்து உள்ளால் நகராட்சி ஆணையா் ராயப்பா கூறியதாவது:
‘இக்கல்லூரியில் பயிலும் கேரளத்தைச் சோ்ந்த 40 மாணவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு கல்லூரி வளாகத்தை மாவட்ட சுகாதார அதிகாரி, ஒருங்கிணைப்பு அதிகாரி ஆகியோருடன் கல்லூரியைப் பாா்வையிட்டு, அதை மூடுவதற்கு உத்தரவிட்டேன். அந்தப் பகுதியே தடை செய்யப்பட்டுள்ளது. கல்லூரியில் படிக்கும் பிற மாணவா்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளோம். எனவே, மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றாா்.