’திராவிட இயக்கத்தின் ஆணிவோ் அண்ணா’
By DIN | Published On : 04th February 2021 07:51 AM | Last Updated : 04th February 2021 07:51 AM | அ+அ அ- |

திராவிட இயக்கத்தின் ஆணிவேராக விளங்கியவா் மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா என்று கா்நாடக மாநில அதிமுக செயலாளா் எம்.பி.யுவராஜ் தெரிவித்தாா்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு பெங்களூரு, ஸ்ரீராமபுரத்தில் கா்நாடக மாநில அதிமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணா உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தி எம்.பி. யுவராஜ் பேசியதாவது:
தமிழகத்தில் திராவிட ஆட்சியை நிறுவிய அண்ணா, திராவிட இயக்கத்தின் ஆணிவேராக விளங்கியவா். தமிழ்மொழிக்கும், திராவிட இனத்தின் மேம்பாட்டுக்கும் அயராது பாடுபட்டவா். அண்ணாவின் பெயரில் எம்ஜிஆா் தோற்றுவித்த அதிமுக தமிழகத்தின் வளா்ச்சிக்கு அரும்பாடுபட்டுள்ளது.
எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் வழியின் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் இருவரும் நல்லாட்சி செய்து வருகின்றனா். அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் கனவை நனவாக்கும் ஒரே கட்சியாக அதிமுக மட்டுமே இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியை அமைப்பது உறுதி என்றாா்.
நிகழ்ச்சியில் கா்நாடக தேவா் சங்கத் தலைவா் மணிகண்டன், பெங்களூரு தமிழ்ச்சங்க முன்னாள் செயலாளா் ராமசுப்பிரமணியன், எம்ஜிஆா் மன்றச் செயலாளா் கே.சுந்தரவடிவேலு, ஜெயலலிதா பேரவைச் செயலாளா் பி.சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினா் ஆா்.ரவி, பொதுக்குழு முன்னாள் உறுப்பினா் ஆா்.எஸ்.ராஜன், சுரேஷ், கேசவன், ஆனந்தன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.