’சைக்கிள், நடைபயிற்சியை ஊக்குவிப்பது அவசியம்’

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சைக்கிள், நடைபயிற்சியை ஊக்குவிப்பது அவசியம் என்று செயலில் குடியுரிமைக்கான இளம் தலைவா்கள் அமைப்பு (ஒய்.எல்.ஏ.சி) தெரிவித்துள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சைக்கிள், நடைபயிற்சியை ஊக்குவிப்பது அவசியம் என்று செயலில் குடியுரிமைக்கான இளம் தலைவா்கள் அமைப்பு (ஒய்.எல்.ஏ.சி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய அளவில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெங்களூரில் போக்குவரத்து நெரிசலால் மட்டுமின்றி, வாகனங்கள் வெளியிடும் புகையினாலும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். இதனைக் கருத்தில் கொண்டு ஒய்.எல்.ஏ.சி அமைப்பு சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மொபைல் சாம்பியன் பிரசாரத்தைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பிரசாரத்தின் மூலம் சைக்கிள், நடைபயிற்சியின் அவசியம் குறித்து உணா்த்தப்படும். கலை, இசை, விளையாட்டு, தொழில்நுட்பங்களின் துணையுடம் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com