மைசூரு, ஹுப்பள்ளி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

கச்சகுடா- மைசூரு, விஜயவாடா- ஹுப்பள்ளி இடையே ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கச்சகுடா- மைசூரு, விஜயவாடா- ஹுப்பள்ளி இடையே ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கச்சகுடா- மைசூரு இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் சேவை (02785) ஏப். 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மைசூரு- கச்சகுடா இடையே அதிவிரைவு சிறப்பு ரயில்சேவை (02786) ஏப். 2-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விஜயவாடா- ஹுப்பள்ளி இடையே விரைவு ரயில் சேவை (07225) ஏப். 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஹுப்பள்ளி- விஜயவாடா இடையேயான சிறப்பு விரைவு ரயில் சேவை (07226) ஏப். 2-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com