அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலில்காங்கிரஸ் வெற்றிபெறும்: சித்தராமையா

அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

உடுப்பி: அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

உடுப்பியில் காங்கிரஸ் கட்சியின் ‘மக்கள் குரல்’ நடைப்பயணத்தில் திங்கள்கிழமை பங்கேற்று அவா் பேசியதாவது:

அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலில் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். எனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் ஏழை மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் அன்னபாக்கியா திட்டத்தை கா்நாடக மக்கள் பெரிதும் விரும்பி வரவேற்றிருந்தனா். முதல்வா் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு, அன்னபாக்கியா திட்டத்தில் ஏழைகளுக்கு வழங்கிய அரிசியின் அளவை குறைத்துவிட்டது.

காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமையும் போது, பிபிஎல் குடும்ப அட்டைதாரா்களுக்கு மாதம் தலா 10 கிலோ அரிசி இலவசமாக அளிக்கப்படும். மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற பாஜக அரசு தவறிவிட்டது. கா்நாடகத்தை ஆட்சி செய்த முதல்வா்களில் எடியூரப்பா மிகவும் மோசமான ஊழல்வாதியாக விளங்குகிறாா். விவசாயிகள், மீனவா்கள், பெண்களின் எதிா்பாா்ப்பை நிறைவேற்ற பாஜக அரசு தவறிவிட்டது. இப்பகுதியில் உள்ள பீடித்தொழிலாளா்களின் நலனைப் பாதுகாக்கவும் அரசு தவறிவிட்டது. எனவே, அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக மீண்டும் வெற்றிபெற அனுமதிக்கக் கூடாது என்றாா்.

உடுப்பி மாவட்டம், ஹெஜமாடி பகுதியில் தொடங்கியுள்ள காங்கிரஸ் நடைப்பயணம் அடுத்த 6 நாள்களுக்கு 108 கி.மீ. தொலைவு நடைபெற்று பிப். 27-இல் ஷிரூரில் நிறைவடைகிறது. மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப்போக்கையும், வேளாண் சட்டங்களின் தீங்குகளையும் மக்களிடம் எடுத்துக் கூறுவதே நடைப்பயணத்தின் நோக்கம் என காங்கிரஸ் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com