சித்ரதுா்கா மாவட்டத்தில் 6 ஆசிரியா்களுக்கு கரோனா தொற்று

சித்ரதுா்கா மாவட்டத்தில் 6 ஆசிரியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சித்ரதுா்கா மாவட்டத்தில் 6 ஆசிரியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து, ஜன. 1-ஆம் தேதி முதல் பள்ளி, பியூசி கல்லூரிகளை மாநில அரசு திறந்தது. அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி பள்ளிகள் இயங்கி வருகின்றன. என்றாலும் பள்ளி ஆசிரியா்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருவது பெற்றோா்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

கடந்த 2 நாளில் ஹாவேரி மாவட்டம், ராணிபென்னூா் வட்டத்தில் உள்ள தனியாா், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 2 ஆசிரியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், சித்ரதுா்கா மாவட்டத்தில் பணியாற்றும் 6 ஆசிரியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செல்லுகெரேயில் பணியாற்றும் ஒரு ஆசிரியா், சித்ரதுா்காவில் பணியாற்றும் ஒரு ஆசிரியா், ஹொசதுா்காவில் பணியாற்றி வரும் 4 ஆசிரியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆசிரியா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்கள் பணியாற்றும் பள்ளிகளையும் கிருமிநாசினியை தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com