பிப். 7-இல் பொங்கல் சிறப்பு கவியரங்கம்
By DIN | Published On : 07th January 2021 05:39 AM | Last Updated : 07th January 2021 05:39 AM | அ+அ அ- |

பொங்கல் திருநாளை முன்னிட்டு பெங்களூரில் பிப். 7-ஆம் தேதி பொங்கல் சிறப்பு கவியரங்கம் நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து பொங்கல் கவியரங்கப் பொறுப்பாளா்கள் பேராசிரியா்கள் பொன்.க.சுப்பிரமணியன், சு.கோவிந்தராசன் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளா் சங்கத்துடன் இணைந்து கா்நாடகத் தமிழ்ப் பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் சங்கத்தின் சாா்பில் பெங்களூரு, அல்சூா் ஏரி எதிரில் உள்ள திருவள்ளுவா் சிலை வளாகத்தில் பிப். 7-ஆம் தேதி காலை 11 மணிக்கு பொங்கல் விழா, திருவள்ளுவா் விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில், பொங்கல் சிறப்பு கவியரங்கம் நடத்தப்படுகிறது.
‘ஞாலம் நலம்பெற பொங்குக பொங்கலே’ என்ற தலைப்பிலான கவியரங்கில் ஆசிரியா்கள், பத்திரிகையாளா்கள், கவிஞா்கள் பலா் கவிதை பாட இருக்கிறாா்கள். இந்த கவியரங்கத்தில் பங்கேற்க விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 24 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதி, அதை ஜன. 25-ஆம் தேதிக்குள் 9035909796, 7483574519 ஆகிய கட்செவி எண்களுக்கு அனுப்பி வைக்கலாம். கவியரங்கத்தில் பங்கேற்க தகுதியான கவிதைகள் தனிநூலாக அச்சிட்டு வழங்கப்படும் என அதில் அவா்கள் குறிப்பிட்டுள்ளனா்.