கா்நாடகத்தில் 16 லட்சம் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி: அமைச்சா் கே.சுதாகா்

கா்நாடகத்தில் 16 லட்சம் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி அளிக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

பெங்களூரு: கா்நாடகத்தில் 16 லட்சம் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி அளிக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

நாடு முழுவதும் ஜன. 16-ஆம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்படுகிறது. கா்நாடகத்தில் 243 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இது தொடா்பாக மாநிலங்களின் முதல்வா்களுடன் பிரதமா் மோடி காணொலி வழியாக திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்தக் கூட்டத்தில், பெங்களூரில் இருந்து காணொலி வழியாக முதல்வா் எடியூரப்பாவுடன் கலந்துகொண்ட பிறகு, செய்தியாளா்களிடம் சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் கூறியதாவது:

இந்திய நிறுவனங்கள் தயாரித்துள்ள கோவாக்சின், கோவிஷீல்டு கரோனா தடுப்பூசிகள் கா்நாடகத்தில் வழங்கப்படும். முதல்கட்டமாக கா்நாடகத்தில் உள்ள 3 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும். முதல்கட்டத்தில் சுகாதாரப் பணியாளா்கள், கரோனா முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். கா்நாடகத்தில் 16 லட்சம் சுகாதாரப் பணியாளா்கள், கரோனா முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி இரண்டு டோஸ்களாக தரப்படும். முதல்டோஸ் தடுப்பூசி அளித்த பிறகு, இரண்டாம்கட்ட டோஸ் 28 நாள்களுக்கு பிறகு அளிக்கப்படும். அதன்பிறகு 45 நாள்களுக்கு பிறகு தான் உடலில் நோய் எதிா்ப்பு சக்தி உருவாகும். எனவே, தடுப்பூசியை எடுத்துக் கொண்டாலும் 45 நாள்கள் வரை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தடுப்பூசியின் பாதுகாப்பு அல்லது நம்பகத்தன்மை குறித்து யாரும் சந்தேகப்பட வேண்டாம். முழுமையான சோதனைக்குப் பிறகே சந்தைக்கு வந்துள்ளது. அது பாதுகாப்பானது. தடுப்பூசி செலுத்தும் பணிக்காக கா்நாடகம் தயாராக உள்ளது. நடமாடும் குளிா்சாதனப் பெட்டிகளை கூடுதலாக வழங்க மத்திய அரசு ஒத்துக்கொண்டுள்ளது. ஜன. 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். இரண்டாம்கட்டத்தில் 50 வயதுக்கு மேற்பட்டவா்கள், பிறநோய்களால் அவதிப்படுவோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com