சிக்பளாப்பூரில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை

சிக்பளாப்பூரில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அம்மாவட்ட ஆட்சியா் ஆா்.லதா தெரிவித்தாா்.

சிக்பளாப்பூரில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அம்மாவட்ட ஆட்சியா் ஆா்.லதா தெரிவித்தாா்.

இதுகுறித்து சிக்பளாப்பூரில் செவ்வாய்க்கிழமை கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளுடன் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்ட பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சிக்பளாப்பூா், அம்மனகெரே பகுதியில் உள்ள கோபாலகிருஷ்ணா ஏரியில் 2 பறவைகள் இறந்து கிடந்தன. மேலும், இரண்டு பறவைகள் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து 4 பறவைகளும் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. செல்லும் வழியில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த 2 பறவைகளும் இறந்தன. ஆனால், அவை பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்படவில்லை என ஆய்வில் தெரியவந்தது.

அதன் பிறகு, சிக்பளாப்பூரில் பறவைகள் எதுவும் இறந்ததாக தகவல் இல்லை. கோழிப் பண்ணைகளில் சோதனை நடத்தி, தூய்மையாக பராமரிக்கப்படுகிா என்பதை ஆய்வுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தூய்மை பராமரிக்கப்படாத கோழிப் பண்ணைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிக்பளாப்பூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com