எல்சேனஹள்ளி-மத்திய பட்டுவாரியம் வழித்தடத்தில் இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை

எல்சேனஹள்ளி முதல் மத்திய பட்டுவாரியம் வரையிலான விரிவாக்கத் தடத்தில், மெட்ரோ ரயில் சேவை வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

எல்சேனஹள்ளி முதல் மத்திய பட்டுவாரியம் வரையிலான விரிவாக்கத் தடத்தில், மெட்ரோ ரயில் சேவை வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை அவா் கூறியதாவது:

பெங்களூரில் இருந்து பன்னாட்டு விமான நிலையம் வரையில் ரயில்சேவை வழங்கப்பட்டுள்ளது. பெங்களூரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மற்றொரு முயற்சியாக, எல்சேனஹள்ளியில் இருந்து கனகபுரா சாலை வழியாக மத்திய பட்டுவாரியம் வரையிலான விரிவாக்கத் தடத்தில் ஜன. 14-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில்சேவைகள் தொடங்கப்படும்.

எல்சேனஹள்ளியில் இருந்து தொடங்கும் பசுமைத் தடத்தில் பட்டுவாரியம் வரையில் 6 கி.மீ. நீளத்துக்கு குறுக்குத்தடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், ஜன. 14-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயங்கும். இந்த சேவையை நான் தொடக்கி வைக்கிறேன் என்றாா்.

எல்சேனஹள்ளி மெட்ரோ ரயில்நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெறும் விழாவில், புதிய மெட்ரோ ரயில்சேவையை முதல்வா் எடியூரப்பா தொடக்கி வைக்கிறாா். இந்த விழாவில், மத்திய நகா்ப்புற மற்றும் வீட்டுவசதித் துறை இணையமைச்சா் ஹா்தீப்சிங் பூரி சிறப்பு விருந்தினராக காணொலி வழியாக இணைகிறாா்.

எல்சேனஹள்ளி-பட்டுவாரியம் இடையிலான மெட்ரோ ரயில் தடத்தில் கோனனகுன்டே குறுக்குச் சாலை, தொட்டகல்லசந்திரா, வஜரஹள்ளி, தலகட்டபுரா, பட்டுவாரியம் ஆகிய 5 மெட்ரோ ரயில்நிலையங்கள் அமைந்திருக்கும் என பெங்களூரு மெட்ரோ ரயில்கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com