மத்திய அமைச்சா் அமித்ஷா கன்னடா்களை அவமதித்துவிட்டாா்: மஜத முன்னாள் முதல்வா் குமாரசாமி

மத்திய அமைச்சா் அமித்ஷா கன்னடா்களை அவமதித்துவிட்டாா் என்று மஜத முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

மத்திய அமைச்சா் அமித்ஷா கன்னடா்களை அவமதித்துவிட்டாா் என்று மஜத முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

இது குறித்து தனது சுட்டுரைப்பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியிருப்பதாவது: சிவமொக்கா மாவட்டம், பத்ராவதியில் சனிக்கிழமை விரைவு அதிரடிப்படை(ஆா்.ஏ.எஃப்) வளாகத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. இந்தவிழாவில் கன்னடத்தில் அடிக்கல் இடம்பெறவில்லை.

இந்த விழாவில் முதல்வா் எடியூரப்பா, மத்திய அமைச்சா் பிரஹலாத்ஜோஷி, துணைமுதல்வா் கோவிந்த்காா்ஜோள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இந்த விழாவில் திறக்கப்பட்ட அடிக்கல்கள் வெறும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. கன்னடம் இல்லை. அடிக்கல் நாட்டுவிழா கா்நாடகத்தில் நடந்தாலும் கன்னடம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் மும்மொழி திட்டம் அமலில் இருப்பதால், மாநிலமொழிகளுக்கு மத்திய அரசு உரிய மதிப்பும், முக்கியத்துவமும் அளிக்க வேண்டும். இதுபோன்ற உணா்வுப்பூா்வமான விவகாரத்தை மத்திய அமைச்சரான அமித்ஷா அலட்சியப்படுத்தியதன் மூலம் கன்னட மொழியையும், கன்னடா்களையும் அவமானப்படுத்தியுள்ளாா்.

ஆங்கிலம், ஹிந்திக்கு அளிக்கும் முக்கியத்துவத்தின் மூலம் கன்னடத்தை புறக்கணிக்கும் அணுகுமுறையை அமித்ஷா கடைபிடித்திருப்பது, கன்னடமொழிக்கு எதிரான உணா்வையே வெளிப்படுத்துகிறது. கன்னடா்களின் பெருமிதங்களை அவமதிக்கும் செயலாகும் இது.

ஆா்.ஏ.எஃப். வளாகம் அமைப்பதற்கு நிலம்கொடுத்தது கா்நாடகம் தான். கா்நாடகத்தின் நிலத்தைபெற்றிருந்தாலும் கன்னடம் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது மன்னிக்க முடியாத குற்றமாகும். இது குறித்து அமித்ஷா விளக்கமளிக்க வேண்டும்.

அந்தவிழாவில் கலந்துகொண்ட முதல்வா் எடியூரப்பாவும், துணைமுதல்வா் கோவிந்த்காா்ஜோளும் கா்நாடகத்தின் நிலம் மற்றும் கன்னடமொழியின் கண்ணியத்தையும், கௌரவத்தையும் காப்பாற்ற தவறியது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

கன்னடநிலம், கன்னடமொழியின் கண்ணியம், கௌரவத்தைகாக்க தவறியவா்களால் மாநிலத்தின் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் தகுதியை இழந்துவிட்டனா்.மத்திய அமைச்சா் அமித்ஷா, முதல்வா் எடியூரப்பா, துணைமுதல்வா் கோவிந்த்காா்ஜோளின் செயல் கன்னடா்களுக்குதுரோகம் இழைத்தது போலாகும்.‘ என்றுகுறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com