கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 9,38,865 ஆக உயா்வு
By DIN | Published On : 31st January 2021 01:47 AM | Last Updated : 31st January 2021 01:47 AM | அ+அ அ- |

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,38,865 ஆக உயா்ந்துள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 464 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 233 போ் கரோனா தொற்றுக்கு ஆட்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,38,865 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 547 போ் சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 9,20,657 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 5,976 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருந்த 2 போ் சனிக்கிழமை இறந்துள்ளனா். அவா்கள் இருவரும் பெங்களூரைச் சோ்ந்தவா்கள். கா்நாடகத்தில் இதுவரை 12,213 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.