அறிவியல் இலக்கிய பயிற்சி முகாம்
By DIN | Published On : 31st January 2021 01:56 AM | Last Updated : 31st January 2021 01:56 AM | அ+அ அ- |

பெங்களூரு: கா்நாடக சாஹித்ய அகாதெமி சாா்பில் அறிவியல் குறித்த இலக்கிய பயிற்சி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து கா்நாடக சாஹித்ய பரிஷத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடக சாஹித்ய பரிஷத் சாா்பில் பிப்.19 முதல் 21-ஆம் தேதிவரை 3 நாள்களுக்கு நடக்கும் மாநில அளவிலான அறிவியல் குறித்த இலக்கிய பயிற்சி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மங்களூரு, பிலிகுலா மண்டல அறிவியல் மையத்தில் நடக்கும் இப்பயிற்சி முகாமில் பங்கேற்க ஆா்வமுள்ள, மாநிலத்தின் எல்லா பகுதிகளையும் சோ்ந்த 20 முதல் 45 வயதுள்ளோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவுசெய்யவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.