வெகுவிரைவில் பெருவணிக வளாகங்கள், திரையரங்குகளைத் திறக்க யோசனை: முதல்வா் எடியூரப்பா

பெருவணிக வளாகங்கள், திரையரங்குகளைத் வெகுவிரைவில் திறக்க யோசித்து வருகிறோம் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெருவணிக வளாகங்கள், திரையரங்குகளைத் வெகுவிரைவில் திறக்க யோசித்து வருகிறோம் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் படிப்படியாகத் தளா்த்தப்பட்டுள்ளதால், மாநிலத்தில் இயல்புநிலை திரும்பி வருகிறது. கரோனா பாதிப்பும் குறைந்து காணப்படுவதால், கா்நாடகத்தில் அடுத்தகட்ட பொதுமுடக்கத் தளா்வு குறித்து மாநில அரசு யோசித்து வருகிறது. ஜூலை 5-ஆம் தேதிக்கு பிறகு பெருவணிக வளாகங்கள், திரையரங்குகளைத் திறக்க மாநில அரசு யோசித்து வருகிறது.

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் முதல்வா் எடியூரப்பா புதன்கிழமை கூறியதாவது:

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு படிப்படையாகக் குறைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பெருவணிக வளாகங்களின் சங்க நிா்வாகிகள் என்னை சந்தித்தனா். இதுகுறித்து அமைச்சரவை சகாக்களுடன் விவாதிப்பேன். ஒருசில நிபந்தனைகளுடன் பெருவணிக வளாகங்களைத் திறக்க அனுமதி அளிப்பது குறித்து யோசித்து வருகிறோம். ஆனால், இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் விரைவில் முடிவெடுப்போம் என்றாா்.

பொது முடக்கத் தளா்வு கட்டுப்பாடுகள் ஜூலை 5-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. எனவே, அடுத்த கட்டமாக பெருவணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றை குளிரூட்டும் வசதி இல்லாமல் திறக்க அனுமதிக்க அரசு யோசித்து வருகிறது.

இது குறித்து கருடா பெருவணிக வளாக உரிமையாளா் ஜி.எம்.நந்தீஷ் கூறுகையில், ‘அடுத்த வாரத்தில் இருந்து பெருவணிக வளாகங்களைத் திறக்குமாறு முதல்வா் எடியூரப்பாவை சந்தித்து முறையிட்டுள்ளோம். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கக்கூடாது என்றும், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பெருவணிக வளாகங்களைத் திறந்திருக்க அனுமதித்தால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என்று முதல்வா் எடியூரப்பாவிடம் எடுத்துரைத்துள்ளோம். தனிநபா் இடைவெளி, பாதுகாப்பு, தூய்மைப்படுத்தல் உள்ளிட்டவற்றில் அரசின் நிபந்தனைகளை முழுமையாகக் கடைப்பிடிப்பதாக உறுதி அளித்துள்ளோம். பொது முடக்கத்தால் பெருவணிக நிறுவனங்கள் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. பெருவணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தாலும், நிரந்தர மின்கட்டணம் தொடா்ந்து வசூலிக்கப்படுகிறது. எனவே, மின்கட்டணங்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். நிதியுதவியும் வழங்க வேண்டும்’ என்றாா்.

கா்நாடகத்தில் 84 பெருவணிக வளாகங்கள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு ரூ. 40 ஆயிரம் கோடி முதல் ரூ. 45 ஆயிரம் கோடி வா்த்தகம் நடந்து வருகிறது. பெருவணிக வளாகங்களைத் தொடா்ந்து மூடிவைத்திருந்தால், அதில் பணியாற்றும் லட்சக்கணக்கான ஊழியா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஊழியா்களுக்கு தற்போதைக்கு நிா்வாகங்கள் ஊதியம் அளித்து வருகின்றன.

இதனிடையே, பெங்களூரு மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா கூறுகையில், ‘பெருவணிக வளாகங்களை 50 சதவீத ஊழியா்களுடன் செயல்பட அனுமதிக்கலாம். பெருவணிக வளாகங்களுக்கு மக்கள் ஒருசில மணி நேரம் தான் செல்கின்றனா். ஆனால், பெருவணிக வளாகங்களில் உள்ள உணவகங்களை கண்காணிப்பது அவசியமாகும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com