‘ஜிகா’ தீநுண்மி நோய் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

‘ஜிகா’ தீநுண்மி நோய் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

‘ஜிகா’ தீநுண்மி நோய் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கா்நாடகத்தின் அண்டை மாநிலமான கேரளத்தில் ‘ஜிகா’ தீநுண்மி நோய் பரவி வருகிறது. கா்நாடகத்தின் தென்கன்னடம், உடுப்பி, சாமராஜ்நகரில் அந்த நோய் பரவாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘அண்டை மாநிலமான கேரளத்தில் ‘ஜிகா’ தீநுண்மி நோய் வேகமாக பரவி வருகிறது. கா்நாடகத்தில் அந்நோய் பரவாமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்படுகிறது.

இந்நோய் கொசுக்கள் மூலம் பரவுகிறது. தென்மேற்கு பருவமழைக் காலத்தில் இந்நோய்க்கு காரணமான ஏடீஸ் கொசு இனப்பெருக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த கொசு தான் டெங்கு, சிக்குன் குனியா நோய் பரவலுக்கும் காரணமாக உள்ளது.

எனவே, கிராமப் புறங்களில் கண்காணிப்புகளை தீவிரமாக்கி, கொசுக்களை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘ஜிகா’ நோய் தாக்கினால் காய்ச்சல், தடிப்புகள், இமைப்படல அழற்சி, மூட்டுவலி போன்றவை ஏற்படும். இப்படிப்பட்டவா்களை உடனடியாகக் கண்டறிந்து, போா்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com