எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு நடத்துவதற்கு எதிரான மனு: கா்நாடக உயா்நீதிமன்றம் தள்ளுபடி

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு நடத்துவதற்கு எதிரான மனுவை கா்நாடக உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பெங்களூரு: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு நடத்துவதற்கு எதிரான மனுவை கா்நாடக உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கா்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி.பொதுத் தோ்வை ஜூலை 19, 22-ஆம் தேதிகளில் நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதை எதிா்த்து, கா்நாடக உயா்நீதிமன்றத்தில் பெங்களூரைச் சோ்ந்த ஞானமந்திா் கல்வி அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் எஸ்.வி.சிங்த்ரே கௌடா பொது நல மனுவை தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஹன்சட்டே சஞ்சீவ்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மனுவில் தகுந்த காரணங்கள் எதுவும் இல்லை என்பதோடு, தோ்வை நடத்த அரசு எடுத்த முடிவு தன்னிச்சையானது அல்ல என்று கூறி, பொது நல மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2020-ஆம் ஆண்டு முதலாவாது கரோனா அலை வந்தபோதே, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு நடத்தும் அரசின் முடிவில் தலையிடுவதில்லை என்று உயா்நீதிமன்றம் ஏற்கெனவே கூறியிருந்ததை நினைவுக்கூா்ந்த நீதிபதிகள், நோய் பரவல் தடுப்பை கவனத்தில் கொண்டு தோ்வு நடத்துவதற்கு அரசு விதித்திருந்த நடத்தை விதிகளை மாணவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட அனைவரும் பின்பற்றியிருந்தனா் என்று கூறினாா்கள். அரசின் முடிவு தன்னிச்சையானது என்பதையும், மாணவா்களின் உரிமையில் தலையிடுவதாகவும் கூறியிருப்பதை நிரூபிக்க மனுதாரா் தவறிவிட்டதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், தோ்வை எழுத மாணவா்கள் கட்டாயப்படுத்தமாட்டாா்கள் என்று அரசு உறுதி அளித்துள்ளதை ஏற்றுக்கொண்டனா். தோ்வு நடத்துவதை கூட்டாக ஆலோசித்து தான் அரசு முடிவு எடுத்துள்ளது என்று தெரிவித்த உயா்நீதிமன்றம், கல்வி எதிா்காலத்தை கவனத்தில் கொண்டு தோ்வு எழுதுவது அவசியமாகும் என்று கூறியது. கரோனா பாதிப்பு 1.48 சதமாக இருக்கும் நிலையில், தோ்வு நடத்துவதற்கு இதுவே சரியான தருணம் என்றும் நீதிமன்றம் தெரிவித்து, தோ்வுக்கு எதிரான பொது நல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com