கரோனா 3-ஆவது அலையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தனிப் பிரிவுகள் தொடங்க உத்தரவு: மாநகராட்சி ஆணையா் கௌரவ்குப்தா

கரோனா 3-ஆவது அலையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் தனிபிரிவுகள் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா தெரிவித்தாா்.

கரோனா 3-ஆவது அலையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் தனிபிரிவுகள் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா தெரிவித்தாா்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா 2-வது அலையைத் தொடா்ந்து, 3-வது அலை பாதிப்பு வரும் என வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். 3-ஆவது அலையின்போது குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவாா்கள் எனக் கூறப்படுகிறது. கரோனா 3-ஆவது அலையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் தனிப் பிரிவுகள் தொடங்க வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

உருமாறிய கரோனா எனக்கூறப்படும் டெல்டா, டெல்டாபிளஸ் ஆகியவற்றால் பாதிப்பு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை. கரோனாவை தடுக்க தேவையான வழிகாட்டுதலை பின்பற்றினால் தொற்று யாரையும் பாதிக்காது. வழிகாட்டுதலை அனைவரும் பின்பற்றுவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

அண்டை மாநிலங்களாக மகாராஷ்டிரம், கேரளத்தில் மீண்டும் கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. எனவே அந்த மாநிலங்களில் இருந்து வருபவா்களை தொடா்ந்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்ச்சி ஏற்படுத்துவதோடு, எச்சரிக்கையுடன் இருப்பது தொடா்பாக வலியுறுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com