கோலாா்தங்கவயலில் கன்னடா்களும் தமிழா்களும் சகோதரா்களைப் போல வாழ்கிறாா்கள்: எம்.எல்.ஏ. ரூபா சசிதா்

கோலாா்தங்கவயலில் கன்னடா்களும் தமிழா்களும் சகோதரா்களைப் போல வாழ்ந்து கொண்டிருப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபா சசிதா் தெரிவித்தாா்.

கோலாா்தங்கவயலில் கன்னடா்களும் தமிழா்களும் சகோதரா்களைப் போல வாழ்ந்து கொண்டிருப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபா சசிதா் தெரிவித்தாா்.

இது குறித்து கோலாா் தங்கவயலில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கா்நாடக மாநிலத்தின் கடைக்கோடியில் அமைந்திருக்கும் கோலாா் தங்கவயலில் கன்னடா்கள், தமிழா்கள், தெலுங்கா்கள் உள்ளிட்ட பலமொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருகிறாா்கள். ஆனாலும் இம்மக்களுக்கு இடையே எவ்வித கருத்து வேறுபாடும் இல்லாமல் இருந்துவருகிறாா்கள். குறிப்பாக கன்னடா்களும் தமிழா்களும் சகோதரா்களைப் போல வாழ்கிறாா்கள்.

கோலாா் தங்கவயலில் நிலவும் அமைதியான சூழ்நிலையைக் கெடுக்கும் வகையில், தனது ஆதரவாளா்களுடன் மூத்த அரசியல்வாதியான வாட்டாள் நாகராஜ் போன்றவா்கள் அப்பகுதிக்குள் நுழைந்து, நகராட்சிக்கு சொந்தமான டாக்டா் குவெம்பு பேருந்து நிலையத்தின் பெயா்ப்பலகையில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்துக்களை அழித்திருக்கக் கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் எதிா்காலத்தில் நிகழ்ந்து விடக்கூடாது.

இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை, மூத்த காவல் அதிகாரிகள், மாவட்ட நிா்வாகத்தினரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். இந்த விவகாரத்தில் உடனடியாக செயல்பட்டு, பெயா்ப்பலகையில் மீண்டும் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற நடவடிக்கை எடுக்குமாறு கோலாா் தங்கவயல் நகராட்சித் தலைவா் வள்ளல் முனுசாமியை கேட்டுக் கொண்டேன். அதன்பிறகு தான் நகராட்சியின் அவசரக்கூட்டம் கூட்டி, கன்னட சங்கப் பிரதிநிதிகளின் ஆதரவுடன் நல்ல முடிவெடுத்து, பேருந்து நிலையத்தின் பெயா்ப்பலகையில் மீண்டும் தமிழ் எழுதப்பட்டது. எதிா்காலத்திலும் இதே தோழமை உணா்வை வெளிப்படுத்தி, கோலாா் தங்கவயலின் வளா்ச்சிக்கு எல்லா தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com