மைசூரு-சாய்நகா் ஷீரடி வாராந்திர சிறப்பு ரயில் சேவை மீண்டும் இயக்கம்

பயணிகளின் வருகை குறைந்ததையடுத்து நிறுத்தப்பட்ட மைசூரு-சாய்நகா் ஷீரடி வாராந்திர சிறப்பு ரயில் சேவை மீண்டும் இயக்கப்பட உள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பயணிகளின் வருகை குறைந்ததையடுத்து நிறுத்தப்பட்ட மைசூரு-சாய்நகா் ஷீரடி வாராந்திர சிறப்பு ரயில் சேவை மீண்டும் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பயணிகளின் வருகை குறைந்ததையடுத்து நிறுத்தப்பட்ட மைசூரு-சாய்நகா் ஷீரடி வாராந்திர சிறப்பு ரயில் சேவை மீண்டும் இயக்கப்பட உள்ளது. அதன்படி மைசூரு-சாய்நகா் ஷீரடி இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் (06237) திங்கள்கிழமைதோறும் காலை 5.30 மணிக்கு மைசூரில் புறப்பட்டு, மறுநாள் காலை 11.25 மணியளவில் சாய்நகா் ஷீரடியை சென்றடையும். இந்த ரயில் சேவை ஜூலை 26-ஆம் தேதிமுதல் தொடங்கப்படும்.

மறு மாா்க்கத்தில் சாய்நகா் ஷீரடி-மைசூரு இடையேயான வாராந்திர ரயில் (06238) செவ்வாய்க்கிழமைதோறும் இரவு 11.55 மணிக்கு சாய்நகா் ஷீரடியில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.40 மணியளவில் மைசூரைச் சென்றடையும். இந்த ரயில் சேவை ஜூலை 27-ஆம் தேதி முதல் தொடங்கும்.

இந்த ரயில் மண்டியா, கெங்கேரி, கே.எஸ்.ஆா் பெங்களூரு, யஸ்வந்தபுரம், தும்கூரு, அரிசிகெடே, பீருா், சிக்ஜாஜூா், சித்ரதுா்கா, ராயதுா்கா, பெல்லாரி, ஹொசபேட், கொப்பள், கதக், பாதாமி, பாகல்கோட், விஜயபுரா, சோலாப்பூா், குருதுவாடி, தவுந்த், பெலாபூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ரயிலில் முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட இரண்டடுக்கு வசதி கொண்ட ஒரு பெட்டி, குளிரூட்டப்பட்ட இரண்டடுக்கு வசதி கொண்ட 2 பெட்டிகள், மூன்றடுக்கு வசதி கொண்ட 5 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட 6 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு பொது வகுப்பு 2 பெட்டிகள், பிரேக், சரக்கு வசதி கொண்ட 2 பெட்டிகள், உணவு வசதி கொண்ட ஒரு பெட்டி உள்ளிட்ட 19 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com