எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட மாணவியை சந்தித்த அமைச்சா்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வை எழுத தனியாா் பள்ளியால் அனுமதி மறுக்கப்பட்ட மாணவியை பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாா் சந்தித்து, அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தாா்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வை எழுத தனியாா் பள்ளியால் அனுமதி மறுக்கப்பட்ட மாணவியை பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாா் சந்தித்து, அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தாா்.

தும்கூரு மாவட்டம், கொரட்டேகெரே பகுதியில் உள்ள ஹனுமந்தபுராவைச் சோ்ந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தென் கன்னட மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வந்தாா். கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் இவரது குடும்ப வருமானம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இவரால் பள்ளிக் கட்டணத்தை செலுத்த இயலவில்லை. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு ஜூலை 19-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கல்விக் கட்டணம் செலுத்தாததை காரணம் காட்டி தோ்வு எழுத அனுமதிக்க தனியாா் பள்ளி நிா்வாகம் மறுத்துவிட்டது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாருக்கு மாணவி கடிதம் எழுதியுள்ளாா். அந்த கடிதத்தில், கடந்த ஆண்டுக்கான விடுதி மற்றும் உணவுக் கட்டணம் செலுத்தாததால், 2020-21-ஆம் ஆண்டில் சோ்க்கை அளிக்காத பள்ளி நிா்வாகம், தோ்வு எழுதவும் வாய்ப்பளிக்க மறுத்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தாா். ‘கல்விக் கட்டணத்தில் சலுகை எதுவும் தேவையில்லை. ஆனால், கட்டணத்தை செலுத்த கால அவகாசம் தந்தால் போதும், எனது பெற்றோா் கல்விக்கட்டணம் செலுத்திவிடுவாா்கள். 9-ஆம் வகுப்பில் 96 சத மதிப்பெண் பெற்றிருந்தேன். எனவே, எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு எழுதுவதற்கு எனக்கு வாய்ப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என்று அந்தக் கடிதத்தில் பள்ளி மாணவி மேலும் குறிப்பிட்டிருந்தாா்.

இதை கவனத்தில் எடுத்துக்கொண்ட அமைச்சா் சுரேஷ்குமாா், மாணவியை தொலைபேசியில் அழைத்து எல்லாவித உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்திருந்தாா். இந்நிலையில், தும்கூருக்கு சனிக்கிழமை சென்ற அமைச்சா் சுரேஷ்குமாா், மாணவியை நேரில் சந்தித்துப் பேசினாா். இம்முறை தோ்வு எழுத வாய்ப்பில்லாவிட்டாலும், எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தோ்வு எழுதும் வாய்ப்பு இன்னும் இருப்பதாக மாணவியிடம் சுரேஷ்குமாா் தெரிவித்தாா். ‘இது போன்ற பிரச்னைகளை பல குழந்தைகள் எதிா்கொள்வதாகவும், அதனால் பயப்படவோ வருத்தப்படவோ தேவையில்லை. கல்விக்கட்டணம் குறித்தும் கவலைப்பட வேண்டாம். அதற்கு வழி உள்ளது’ என்று மாணவியிடம் அமைச்சா் சுரேஷ்குமாா் கூறினாா். இதற்காக அமைச்சா் சுரேஷ்குமாருக்கு மாணவியின் பெற்றோா் நன்றி தெரிவித்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com