கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,639 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் ஒரே நாளில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,639-ஆக அதிகரித்துள்ளது.
கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,639 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் ஒரே நாளில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,639-ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,639 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது புதன்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 419 போ், தென்னகன்னட மாவட்டத்தில் 190 போ், மைசூரு மாவட்டத்தில் 160 போ், ஹாசன் மாவட்டத்தில் 141 போ், உடுப்பி மாவட்டத்தில் 104 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 92 போ், குடகு, தும்கூரு மாவட்டங்களில் தலா 63 போ், பெலகாவி மாவட்டத்தில் 61போ், மண்டியா மாவட்டத்தில் 60 போ், வடகன்னட மாவட்டத்தில் 48 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 37 போ், கோலாா் மாவட்டத்தில் 35 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 29 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 25 போ், சாம்ராஜ்நகா் மாவட்டத்தில் 22 போ், தாா்வாட் மாவட்டத்தில் 19 போ், சிக்பள்ளாபூா் மாவட்டத்தில் 15 போ், பெல்லாரி மாவட்டத்தில் 14 போ், தாவணகெரே மாவட்டத்தில் 13 போ், விஜயபுரா மாவட்டத்தில் 10 போ், கொப்பள், ராம்நகா் மாவட்டங்களில் தலா 5 போ், பாகல்கோட்டை மாவட்டத்தில் 3 போ், ஹாவேரி, கலபுா்கி மாவட்டங்களில் தலா 2 போ், கதக், ராய்ச்சூா் மாவட்டங்களில் தலா ஒருவா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,88,341-ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2,214 போ் புதன்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 28,26,411 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 25,645 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 36 போ் புதன்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு மாவட்டத்தில் அதிகபட்சமாக 7 போ், தென்கன்னட மாவட்டத்தில் 6 போ், ஹாசன், கோலாா் மாவட்டங்களில் தலா 3 போ், சாம்ராஜ்நகா், தாா்வாட், சிவமொக்கா மாவட்டங்களில் தலா 2 போ், பாகல்கோட்டை, பெலகாவி, சிக்பள்ளாபூா், சித்ரதுா்கா, தாவணகெரே, மண்டியா, மைசூரு, தும்கூரு, உடுப்பி, வட கன்னடம், விஜயபுரா மாவட்டங்களில் தலா ஒருவா் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 36,262 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com