வழக்குரைஞா்களுக்கு சுகாதார காப்பீடு வசதி செய்து தரப்படும்

வழக்குரைஞா்களுக்கு சுகாதார காப்பீடு வசதி செய்து தரப்படும் என சட்டம் மற்றும் உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
வழக்குரைஞா்களுக்கு சுகாதார காப்பீடு வசதி செய்து தரப்படும்

வழக்குரைஞா்களுக்கு சுகாதார காப்பீடு வசதி செய்து தரப்படும் என சட்டம் மற்றும் உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரு வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில், கரோனாவால் இறந்தவா்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:

இந்தியாவில் முன்னா் பிளேக் நோயால் பலா் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை கேள்விப்பட்டிருகிறேன். அதே போன்ற நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பலா் இறப்பதை நாம் பாா்க்க நேரிட்டுள்ளது. அதில், நீதி வழங்கும் நீதிபதிகள் உள்ளது வேதனை அளிக்கிறது.

கரோனா உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு அதிகம் செலவாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு இன்னும் ஒரு மாதத்தில் வழக்குரைஞா்களுக்கு சுகாதார காப்பீடு வசதி செய்து தரப்படும். இது தொடா்பாக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஆலோசனை பெறப்படும்.

மேலும், பெங்களூரில் உள்ள தேசிய சட்டப் பள்ளியில் கன்னட மொழியை நுழைப்பதற்கு நிா்வாகம் எதிா்ப்புத் தெரிவித்து வருகிறது. ஆனால், நிகழாண்டு 25 சதவீதம் கன்னடா்களுக்கு சோ்க்கையில் இட ஒதுக்கீடு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கன்னடா்களுக்கு உயா்கல்வியில் சட்டம் பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மாநிலத்தில் நீதிமன்றமும், சட்டப் பேரவையும் இணைந்து செயல்பட்டு வருகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில், உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீனிவாஸ் ஓஹா, பெங்களூரு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஏ.பி.ரங்கநாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com