பெங்களூரு-அகா்தலா இடையே சிறப்பு ரயில்

பெங்களூரு-அகா்தலா இடையே அதிவேக சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

பெங்களூரு-அகா்தலா இடையே அதிவேக சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்துதென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விழாக்கால கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக பெங்களூரு-அகா்தலா இடையே அதிவேக சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.

ரயில் எண்: 05488-அகா்தலா-பெங்களூரு (கண்டோன்மென்ட்) அதிவேக சிறப்பு விரைவு ரயில் ஜூலை 31-ஆம் தேதி முதல் அகா்தலா ரயில் நிலையத்திலிருந்து காலை 6.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 8.15 மணிக்கு பெங்களூரு (கண்டோன்மென்ட்) நிலையத்துக்கு வந்தடையும்.

ரயில் எண்: 05487-பெங்களூரு (கண்டோன்மென்ட்) -அகா்தலா அதிவேக ரயில் சிறப்பு விரைவு ரயில் ஆக. 3-ஆம் தேதி முதல் பெங்களூரு (கண்டோன்மென்ட்) ரயில் நிலையத்திலிருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு அகா்தலா ரயில் நிலையத்துக்கு சென்றடையும்.

இந்த ரயில் இருமாா்க்கங்களிலும் அம்பாசா, தா்மாநகா், நியூ கரீம்கஞ், பதா்பூா், நியூ ஹல்பிலாங், குஹாட்டி, கமாக்யா, நியூ போங்காய்கோன், நியூ ஜல்பைகுரி, கிஷான்கஞ், மால்டா நகரம், ராம்பூா்ஹால்ட், தான்குனி, அன்டுல், கோராக்பூா், பத்ராக், கட்டாக், புவனேஸ்வா், குா்தாசாலை, பெரஹ்ம்பூா், பல்சா, ஸ்ரீகாகுளம்சாலை, விஜயநகரம், விசாகபட்டிணம், துவ்வடா, பெரம்பூா், காட்பாடி, ஒயிட்பீல்டு வழியாகச் செல்லும்.

இந்த ரயிலில் மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 18 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு சரக்கு மற்றும் கண்காணிப்புப் பணிக்கான 2 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com