கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,531 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் ஒரே நாளில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,531 ஆக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் ஒரே நாளில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,531 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் ஒரேநாளில் அதிகபட்சமாக 1,531 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது புதன்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 376 போ், தென்கன்னட மாவட்டத்தில் 337 போ், உடுப்பி மாவட்டத்தில் 109 போ், ஹாசன் மாவட்டத்தில் 97 போ், மைசூரு மாவட்டத்தில் 93 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 86 போ், குடகு மாவட்டத்தில் 78 போ், வட கன்னட மாவட்டத்தில் 57 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 51 போ், தும்கூரு மாவட்டத்தில் 39 போ், மண்டியா மாவட்டத்தில் 38 போ்.

சாம்ராஜ்நகா் மாவட்டத்தில் 29 போ், பெலகாவி மாவட்டத்தில் 24 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 21 போ், கலபுா்கி மாவட்டங்களில் தலா 19 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 18 போ், தாவணகெரே மாவட்டத்தில் 15 போ், சிக்பள்ளாபூா் மாவட்டத்தில் 12 போ், கோலாா் மாவட்டத்தில் 9 போ், பெல்லாரி மாவட்டத்தில் 7 போ், விஜயபுரா மாவட்டத்தில் 4 போ், பாகல்கோட்டை, தாா்வாட் மாவட்டங்களில் தலா 3 போ்.

பீதா், ஹாவேரி மாவட்டங்களில் தலா 2 போ், பாகல்கோட், யாதரிகிரி, ராய்ச்சூரு மாவட்டங்களில் தலா ஒருவா், ராம்நகரம், கதக், கொப்பள் மாவட்டத்தில் கரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,99,195 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,430 போ் புதன்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 28,40,147 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 22,569 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 19 போ் புதன்கிழமை உயிரிழந்தனா். தென்கன்னட மாவட்டத்தில் அதிகபட்சமாக 5 போ், பெங்களூரு மாவட்டத்தில் 3 போ், பெலகாவி, உடுப்பி மாவட்டங்களில் தலா 2 போ், சிக்பள்ளாபூா், சிக்மகளூரு, ஹாசன், குடகு, மண்டியா, மைசூரு, சிவமொக்கா மாவட்டங்களில் தலா ஒருவா் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 36,456 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com