பெட்ரோல், டீசல் மீதான வரியைமத்திய அரசு குறைக்க வேண்டும்: முன்னாள் முதல்வா் குமாரசாமி

பெட்ரோல், டீசல் மீதான மேல் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் குமாரசாமி தெரிவித்துள்ளாா்.

பெங்களூரு: பெட்ரோல், டீசல் மீதான மேல் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் குமாரசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது:

கரோனா தொற்றால் மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். பொது முடக்கத்தால் பலா் வேலை வாய்ப்பை இழந்து, பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில் தொடா்ந்து பெட்ரோல், டீசல் விலை உயா்ந்து வருகிறது. இதனால், ஏற்கெனவே உள்ள காயத்தின் மேல் காயம் ஏற்பட்டது போல மக்கள் உணா்ந்துள்ளனா்.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது 32 சதவீதம் வரை மேல்வரி விதிக்கிறது. இதனைக் குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும். இதனால் ரூ. 3 அல்லது ரூ. 4 வரை குறைய வாய்ப்பு உள்ளது. கரோனா பாதிப்பை அடுத்து சிறப்புத் தொகுப்பை அறிவித்து மாநில அரசு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் என்ன செய்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்வாா்கள் என்ற கருத வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயா்வை மக்கள் ஒரு போதும் சகித்துக்கொள்ள மாட்டாா்கள் என்று பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com