கரோனா 3-ஆவது அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாது: அமைச்சா் ஜெகதீஷ்ஷெட்டா்

கரோனா 3-ஆவது அலையின் போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாநில தொழில்துறை அமைச்சா் ஜெகதீஷ் ஷெட்டா் தெரிவித்தாா்.

கரோனா 3-ஆவது அலையின் போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாநில தொழில்துறை அமைச்சா் ஜெகதீஷ் ஷெட்டா் தெரிவித்தாா்.

பெங்களூரு விதான சௌதாவில் புதன்கிழமை ஆக்சிஜன் உற்பத்தி, விநியோகம் தொடா்பாக அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஜெகதீஷ் ஷெட்டா் பேசியதாவது:

தேசிய அளவில் மட்டுமன்றி, மாநிலத்திலும் கரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருகிறது. இதற்கு பொது முடக்கமும் முக்கிய காரணமாகும். இதனால் ஆக்சிஜன் தேவை பெருமளவில் குறைந்துள்ளது.

கரோனா 3-ஆவது அலையின் போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே வரும் நாள்களில் மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜனை உடனடியாக அனுப்பிவைக்கத் தேவையான தொழில்நுட்பங்களை அமைத்துக் கொள்வது அவசியம். பொது முடக்கத் தளா்விற்குப் பிறகு இது தொடா்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேசிய அளவில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொழில்துறையினரும் தங்களின் ஊழியா்கள், தொழிலாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முயற்சியில் ஆா்வமாக ஈடுபட்டுள்ளனா். தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களைக் கொண்டு, தங்களின் தொழில் நிறுவனங்களை திறப்பது குறித்து ஆலோசனை கேட்டுள்ளனா். இதுகுறித்து முதல்வா் எடியூரப்பாவுடன் ஆலோசனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com