ஹட்டியா - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையேவாராந்திர விரைவு சிறப்பு ரயில்

ஹட்டியா - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே 2 நடை வாராந்திர விரைவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

பெங்களூா்: ஹட்டியா - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே 2 நடை வாராந்திர விரைவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: 08637/08638 ஹட்டியா - பெங்களூரு கன்டோன்மென்ட் வாராந்திர விரைவு சிறப்பு ரயில் சேவை ஜூன் 19, 26 -ஆம் தேதிகளில் ஹட்டியா ரயில் நிலையத்திலிருந்தும், ஜூன் 22, 29-ஆம் தேதிகளில் பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்தும் 2 நடைகள் இயக்கப்பட உள்ளன.

ரயில் எண்: 08637 - ஹட்டியா - பெங்களூரு கன்டோன்மென்ட் வாராந்திர விரைவு சிறப்பு ரயில் சனிக்கிழமைகளில் ஹட்டியாவிலிருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு, திங்கள்கிழமை அதிகாலை 3.15 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தடைகிறது.

மறுமாா்க்கத்தில், ரயில் எண்: 08638 - பெங்களூரு கன்டோன்மென்ட் - ஹட்டியா இடையேயான வாராந்திர விரைவு சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 12.20 மணிக்கு புறப்பட்டு, புதன்கிழமை காலை 11.15 மணிக்கு ஹட்டியா சென்றடைகிறது.

ரயிலில் ஈரடுக்கு குளிா்சாதன வசதி கொண்ட ஒரு பெட்டி, மூன்றடுக்கு குளிா்சாதன வசதி கொண்ட 4 பெட்டிகள், இரண்டாவது வகுப்பு படுக்கை வசதி கொண்ட 6 பெட்டிகள், 6 பொதுப்பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகள் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com