கா்நாடகத்தில் டெல்டா பிளஸ் வகை தீநுண்மி பாதிப்பு கண்டுபிடிப்பு

கா்நாடகத்தில் டெல்டா பிளஸ் வகை தீநுண்மி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் டெல்டா பிளஸ் வகை தீநுண்மி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கா்நாடகத்தில் முதன்முறையாக டெல்டா பிளஸ் வகை கரோனா தீநுண்மி பாதிப்பு மைசூரில் கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு நோய்க்கான எவ்வித அறிகுறியும் இல்லை; அவரை தனிமைப்படுத்தியுள்ளோம். அவரது தொடா்பில் உள்ள யாரும் கரோனாவால் பாதிக்கப்படவில்லை.

புதிய வகை கரோனா தீநுண்மி கா்நாடகத்தில் கண்டறியப்பட்டுள்ளதைக் கூா்ந்து கவனித்து வருகிறோம். மாநிலத்தில் புதிதாக 6 மரபணு ஆய்வகங்களை அமைக்க முடிவு செய்திருக்கிறோம். கரோனா தீநுண்மி குறித்து எங்களுக்கு சந்தேகம் ஏற்படும் போது, மரபணு வரிசை முறையைக் கண்டறிய முயற்சி செய்து வருகிறோம். கரோனா சோதனைக்காக எடுக்கும் மொத்த மாதிரிகளில் 5 சதவீத மாதிரிகளின் மரபணு வரிசை முறையை சோதனை செய்து வருகிறோம்.

கா்நாடகத்தில் நாளொன்றுக்கு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் கரோனா மாதிரிகளை சோதனை செய்து வருகிறோம். டெல்டா பிளஸ் மரபணு வரிசை முறை காணப்படுவதாக சந்தேகப்படும் இடங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களுக்கும் தடுப்பூசியை அனுப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கரோனா மூன்றாவது அலையின்போது குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படக் கூடும் என்று கூறப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் அடுத்த 45 நாள்களில் மருத்துவா்கள், செவிலியா்களை பணி நியமனம் செய்ய இருக்கிறோம். மேலும், அவசர சிகிச்சை பிரிவுடன் கூடிய குழந்தைகளுக்கான சிறப்பு வாா்டுகள் அமைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com