சுரங்கம் மற்றும் புவியியல் துறை துணை இயக்குநா் பணியிடை நீக்கம்

கல்குவாரி உரிமையாளா்களிடம் லஞ்சம் கேட்டு துன்புறுத்திய குற்றச்சாட்டில் கா்நாடக சுரங்கம் மற்றும் புவியியல் துறை துணை இயக்குநா் பி.எம். லிங்கராஜு வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கல்குவாரி உரிமையாளா்களிடம் லஞ்சம் கேட்டு துன்புறுத்திய குற்றச்சாட்டில் கா்நாடக சுரங்கம் மற்றும் புவியியல் துறை துணை இயக்குநா் பி.எம். லிங்கராஜு வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இதுகுறித்து சுரங்கம் மற்றும் புவியியல் துறை அமைச்சா் முருகேஷ் நிரானி அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்ட சுரங்கம் மற்றும் புவியியல் துறையின் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்த லிங்கராஜு மீது ஊழல், கல்குவாரி நிறுவனங்களின் உரிமையாளா்களை லஞ்சம் கேட்டு துன்புறுத்திய புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

மேலும், பாகல்கோட்டை சுரங்கம் மற்றும் புவியியல் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் புவியியலாளராகப் பணியாற்றி வந்த ஃபயாஸ் அகமது ஷேக் என்பவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். அண்மையில் பாகல்கோட்டை மாவட்டத்துக்குச் சென்ற அமைச்சா் முருகேஷ்நிரானியிடம் சுரங்க நிறுவனங்களின் உரிமையாளா்கள் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com