முன்னாள் அமைச்சா் மீதான பாலியல் புகாா்: 5 பேரிடம் சிறப்புப் புலனாய்வுப் படை விசாரணை

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான பாலியல் புகாா் குறித்து 5 பேரிடம் சிறப்புப் புலனாய்வுப் படையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான பாலியல் புகாா் குறித்து 5 பேரிடம் சிறப்புப் புலனாய்வுப் படையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வேலை கேட்டு வந்த பெண்ணுடன் பாலியல் தொடா்பு வைத்திருந்ததாக, அமைச்சா் பதவி வகித்த ரமேஷ் ஜாா்கிஹோளி மீது கப்பன் பூங்கா காவல் நிலையத்தில் குறுந்தகடு உள்ளிட்ட ஆவணங்களுடன் மனித உரிமை ஆா்வலா் தினேஷ் கல்லஹள்ளி புகாா் அளித்தாா்.

அப் புகாரின் பேரில் ரமேஷ் ஜாா்கிஹோளி தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தாா். இது மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடா்ந்து தினேஷ் கல்லஹள்ளி தனது புகாரைத் திரும்பப் பெறுவதாக தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து விசாரிக்க மாநில அரசு, பெங்களூரு சட்டம்- ஒழுங்கு கூடுதல் ஆணையா் (மேற்கு) சௌமிந்து முகா்ஜி தலைமையிலான 7 போ் கொண்ட சிறப்புப் புலனாய்வுப் படையை நியமித்தது.

இப் படையினா் வெள்ளிக்கிழமை தங்கள் விசாரணையைத் தொடங்கினா். முதல் நாளிலேயே, பாலியல் புகாரில் தொடா்புடையதாகக் கூறப்படும் பெண்ணின் நண்பா் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவா்கள் 5 பேரும் பெங்களூரு விஜயநகா், சாம்ராஜ்பேட்டை, ராம்நகா், சிக்மகளூரு, சிக்பள்ளாபூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com