கா்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளை மூடுவது குறித்துமுதல்வரிடம் ஆலோசித்து முடிவு: அமைச்சா் கே.சுதாகா்

பள்ளி, கல்லூரிகளை மூடுவது தொடா்பாக முதல்வா் எடியூரப்பாவுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதால் பள்ளி, கல்லூரிகளை மூடுவது தொடா்பாக முதல்வா் எடியூரப்பாவுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கா்நாடகத்தில் சில நாள்களாக கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளை மூடுவதா அல்லது தொடா்ந்து நடத்துவதா என்பது குறித்து இன்னும் எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை.

மாணவா்களின் கல்வி, சுகாதாரத்தையும், தொழில்நுட்ப வல்லுநா்களின் ஆலோசனைகளையும் அறிந்தபின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடா்பாக முதல்வா் எடியூரப்பாவுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

மாநிலத்தில் கரோனா பரவலைத் தடுக்க அரசு மட்டுமின்றி பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லையெனில், கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கமுடியாது.

முதியவா்கள் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வது அவசியம். இளைஞா்கள் விருந்து நிகழ்ச்சி உள்ளிட்ட மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களுக்குச் செல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரித்தால் மக்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை. விருந்து, திருவிழாக்களுக்குத் தடை விதிக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com