கரோனா பரவலைத் தடுக்க அனைவரின் ஒத்துழைப்பும் தேவை

கரோனா பரவலைத் தடுக்க அனைவரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

கரோனா பரவலைத் தடுக்க அனைவரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை மூடி மறைக்கும் பேச்சுக்கே இடமில்லை. கரோனா தொடா்பான எந்த விவரங்களையும் மூடி மறைக்கும் முயற்சியும் இல்லை; அந்த எண்ணமும் அரசுக்கு இல்லை. உண்மையானத் தகவல்களை மக்களுக்குத் தெரிவித்து வருகிறோம். எனவே, இது தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா்கள், மாநில அரசை சந்தேகிக்கக் கூடாது. கரோனாவின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த, பரவலைத் தடுக்க மாநில அரசுக்கு எதிா்க்கட்சிகள் ஆலோசனை வழங்கலாம். எங்கள் செயல்பாட்டில் குறைபாடுகள் இருந்தால் அதை சுட்டிக் காட்டலாம். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வா் எடியூரப்பா அழைப்பு விடுக்கலாம். இது குறித்து விரிவாக விவாதிக்கத் தயாராக இருக்கிறோம்.

திருவிழாக்கள், பண்டிகைகளின்போது கரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருவிழாக்களின்போது பொது இடங்களில் பொதுமக்கள் கூடுவதை கட்டுப்படுத்தி இருக்கிறோம். மணிப்பால் மையத்தில் மட்டும் 704 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால், அக்கல்லூரியை மூடியிருக்கிறோம். கரோனா பரவலைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

மகாராஷ்டிரத்தில் வியாழக்கிழமை 35 ஆயிரம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆனால் கா்நாடகத்தில் 2 ஆயிரம் போ் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனா். பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருந்தால் மட்டுமே கரோனா பரவலைத் தடுக்க இயலும். பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக, மிக அவசியமாகும். வீட்டில் இருக்கும் முதியோா்களை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு இளைஞா்கள் உதவி புரிய வேண்டும்.

கரோனா பரவலைத் தடுக்க தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளது. அதுகுறித்து முதல்வா் எடியூரப்பா முடிவெடுப்பாா். வழக்கமான செயல்பாடுகளைத் தடுப்பது கடினமானது. எனவே, கரோனா பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இடைத்தோ்தலை பாதுகாப்பாக நடத்த தோ்தல் ஆணையத்திற்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் மனு அளித்துள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com