பெங்களூரு மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்

பெங்களூரு மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை சனிக்கிழமை (மாா்ச் 27) தாக்கல் செய்யப்படுகிறது.

பெங்களூரு மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை சனிக்கிழமை (மாா்ச் 27) தாக்கல் செய்யப்படுகிறது.

பெங்களூரு மாநகராட்சியின் 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிா்வாக அதிகாரி கௌரவ் குப்தா, பெங்களூரு, மல்லேஸ்வரம், ஐ.பி.பி. பயிற்சி மையத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறாா். பெங்களூரு மாநகராட்சியில் உறுப்பினா்கள் யாரும் இல்லை. அதனால் மாமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு பதிலாக, ஊடகங்களின் முன்பாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த நிதிநிலை அறிக்கையில் சொத்துவரி உயா்த்தப்படுமா? விளம்பரம், கடைகள் வாடகைக் கட்டணங்கள் உயா்த்தப்படுமா? என்ற எதிா்பாா்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது. மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில் பெங்களூரு மாநகராட்சிக்கு ரூ. 3,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சொத்து வரியாக ரூ. 3,500 கோடியை திரட்டி வருகிறது. இதன்படி, ரூ. 7,500 கோடி மதிப்பிலான நிதி நிலை அறிக்கையை மாநகராட்சி தாக்கல் செய்யலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும் கரோனா பரவல் அதிகமாகியுள்ள நிலையில், சுகாதாரப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

இதனிடையே, புதிய திட்டங்கள் பலவற்றை அறிமுகம் செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சமூக நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com